Raagavardhini | Thiruvaindhezhuthe | Sriraman | Mugilan | Smule Singers

0 Просмотры
Издатель
Listen to the "Thiruvaindhezhuthe", a Tamil devotional song from the album Raagavardhini by Smule singers. To listen to more devotional songs and Indian classical music, subscribe to Euphony - It's Music.

#Raagavardhini #Thiruvaindhezhuthe #Smule

Raagavardhini

Music - Sriraman
Lyrics - Mugilan
K. S. Shyaam Sundar
Venkatraman
Sathish Ramanathan
Swaminathan S
Seenu
B Gopalakrishnan
Female Harmonies - Srividya Natarajan,
Chitra MohanKumar,
Gayathri Jayaraman & Veena

Recorded at Aalayaa Studios by Vinu. H
Mixed & Mastered by Ramesh Kidaambi
DOP - Santhosh
Assistant camera - Arun
Cuts and colors - Kishore

Lyrics

--------
கண்ணி-1
---------
திருவைந்தெழுத்தே...சிவம் சிவம்...
உயிர்களுக்கதுவே ....தவம் தவம்...(1+1)

பஞ்சபூதமாய் பிரபஞ்சம் மீதில்
ஆடும் சிவ சிவமே...
அக்கினிக்காற்று நிலம்நீர் ஊற்று
வானும் சிவசிவமே...
(திருவைந்தெழுத்தே...)

காஞ்சிதில்லையில் காளஹஸ்தியில்
அருணையில் சிவசிவமே...
ஆனைக்காவிலும் அகிலமெங்கிலும்
தரிசனம் தருபவன் ஹரஹரசிவமே...
( திருவைந்தெழுத்தே...)

கண்ணி:-2
----------
அருணையில் இருந்தே...சிவம் சிவம்...
அனலென எழுதே ....நிதம் நிதம்...(1+1)

அஷ்டலிங்கமாய் கிரிவலப்பாதை
ஆளும் சிவ சிவமே...
ஸ்ரீஅர்த்தநாரி தத்துவமாகி
வாழும் சிவசிவமே...
(அருணையில் இருந்தே...)

உண்ணாமுலையவள் உடனென உறையும்
அண்ணாமலை சிவமே...
எண்ணும் யாவர்க்கும் மண்ணக வாழ்வில்
முக்தியை வழங்கிடும் ஹரஹரசிவமே...
(திருவைந்தெழுத்தே...)

கண்ணி:-3
----------
காஞ்சியின் வரமே... சிவம் சிவம்...
ஏகம்பன் எனவே... சுகம் சுகம்...(1+1)

கம்பைக்கரையினில் களிநடம் காட்டும்
கூத்தன் சிவசிவமே...
ரிக் யஜூர் சாமம் அதர்வண வேதம்
வாழ்த்தும் சிவசிவமே...
(காஞ்சியின் வரமே...)

காசிலிங்கனை பேசிட மிஞ்சும்
காஞ்சியின் சிவசிவமே...
மங்கை காமாட்சி கொங்கைத் தழும்புடன்
திகழ்பவன் மகிழ்பவன் ஹரஹரசிவமே...
(திருவைந்தெழுத்தே...)

கண்ணி:-4
----------
திருச்சிற்றம்பலனே...சிவம் சிவம்...
திருநடவிடமே .... சிதம்பரம்... (1+1)

தில்லை வனத்தினில் தரிசனம் காட்டும்
ஏகன் சிவ சிவமே...
புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர்
வேண்டும் சிவ சிவமே...
(திருச்சிற்றம்பலனே...)

ஆயிரங்கால் எழும் மண்டபம் அதிலே
ஆடிடும் சிவ சிவமே...
வில்வத்தளமாகி மாயத்திரை நீக்கி
ரகசியம் உணர்த்திடும் ஹரஹரசிவமே...
(திருவைந்தெழுத்தே...)

கண்ணி:-5
----------
மலைமகள் தினமே...தொழும் தொழும்...
ஜலப்பிரவாகமே... சிவம் சிவம்... (1+1)

ஆனைக்காவினில் அப்புலிங்கமாய்
ஆடும் சிவ சிவமே...
ஆனையும் சிலந்தியும் அஷ்ட வசுக்களும்
வேண்டும் சிவ சிவமே...
(மலைமகள் தினமே...)

நாவல் அடியினில் நீரீநிலை வடிவினில்
வாழ்ந்திடும் சிவ சிவமே...
அன்பர் நெஞ்சினில் ஜம்புகேசனாய்
நிறைந்திடும் நிலைத்திடும் ஹரஹரசிவமே...
(திருவைந்தெழுத்தே...)

கண்ணி:-6
----------
வாயுவின் தலமே... எழும் எழும்...
வளர்பிறை யோகமே...சிவம் சிவம்...(1+1)

காளஹஸ்தியில் காளன் சிலந்தியும்
காணும் சிவ சிவமே...
கண்ணப்பநாதர் கண்ணப்பி வேண்டி
போற்றும் சிவ சிவமே...
(வாயுவின் தலமே...)

ஞானப்பூங்கோதை சமேதராகி
அருளிடும் சிவ சிவமே...
ராகு கேது பரிகார ஷேத்திரம்
எழுந்திடும் வளர்ந்திடும் ஹரஹரசிவமே...
(திருவைந்தெழுத்தே...)

Subscribe for more Devotional videos -

'Euphony - It's Music' Contact Number : +919840079929

Like Us at -

In Association with Divo
Категория
Развлекательные передачи
Комментариев нет.